கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகம் நடாத்தும் உலக சிறுவர் தினமும்,பொருட்காட்சியும்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகம் நடாத்தும் உலக சிறுவர் தினமும், சிறுவர் பொருட்காட்சியும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், அக்கறைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, ஆகிய நான்கு கல்வி வலயங்களையும் இணைத்து அட்டாளைச்சேனை அல் முனிறா பெண்கள் உயர்தர பாடசாலையில் எதிர் வரும் 15,16 ஆம் தினங்களில் அம்பாறை மாவட்ட செயலாற்று பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது என அக்கறைப்பற்று வலயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் எஸ்.எல்.ஹபில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண எதிர் கட்சி தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களையும்,பெற்றோர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -