மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸரத்துக்கு பணிவிடை செய்தவருக்கு பெற்றோர் சகிதம் இலவச உம்ரா..!

ர்ஹூம் ஷெய்ஷுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவிடை செய்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த அல்ஹாபிழ் மௌலவி நாசர் முஹம்மட் றிபாஸ் (பலாஹி) தனது பெற்றோர் சகிதம், உம்ரா கடமையை நிறைவேற்ற எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளார். 

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் இலவச உம்ரா திட்டத்துக்கு அமைய இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களது பயண ஆவணங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. 

இதன் போது ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கான பயண ஆவணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், சஹ்வான் டிரவல்ஸ் உரிமையாளர் சமீம் ஹாஜியார் மற்றும் அல்ஹாபிழ் மௌலவி றிபாஸின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், “நாட்டில் மார்க்க விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள உலமாக்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அந்தவகையில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அவர்களை கௌரவப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை – திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

இலங்கை முஸ்லிம்களின் எழுச்சிக்காக பாரிய சேவையாற்றிய மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸரத்தின் மறைவு எமக்கு பெரும் இழப்பாகும். அவர்களுக்காக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி பணிவிடை செய்த அல்ஹாபிழ் மௌலவி றிபாஸ் தனது பெற்றோருடன் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி அவர்கள்; புனித மக்கா நோக்கி புறப்படவுள்ளனர்.” –என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -