ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பாணந்துறை தொட்டவத்தை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்தவாரம் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.கஸ்ஸாலி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாணந்துறை பிரதேச செயலாளர் வை. விஜயசிறியும் கௌரவ அதிதிகளாக காணந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.என்.எம். தாஹிர் பாசி, கல்லூரியின் முன்னாள் அதிபர்களான அஹமட் யாசீன், ஐ.எம். நிசாம் சரீப், எம்.எல்.ஏ. அஹ்லா, திருமதி ஷருபுன்னிசா, எம்.சி.எம்.பௌஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ரோஸ், ஓகிட், சன்பிளவர் ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் சன்பிளவர் இல்லம் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டிகளுக்கு பழைய மாணவர் சங்கம், பாசாலை அபிவிருத்திக் குழு, அல்-அமீன் நலன்புரிச் சங்கம், அல்-ஹூதா மாதர் சங்கம், அல்-அமானத் மாதர் சங்கம் மற்றும் உதவுங்கரங்கள் அமைப்பு என்பன போட்டிகள் சிறப்பாக இடம் பெற தமது உதவிகளை நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.