CSN TV அனுமதிப்பத்திரம் இரத்து - ஒளிபரப்புச் சேவை தடை

சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், ஒளிபரப்பு சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பானது 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி 142163 என்ற இலக்கத்தின் கீழ், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோசித்த ராஜபக்சவிற்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கிய காணியையும், கட்டடத்தையும் நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கையகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -