அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் (HNDE) ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் இன்று (27) காலை தங்களுக்கு ஏனைய மாகாணங்களைப்போல நேர்முகப்பரீட்சை மூலம் ரே்ஆந்ங்கிதெடுத்லது ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமத்திய மாகாண ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரர்கள் 74 பேருக்கு ஆங்கில ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடம் 652 காணப்படுகின்ற போதிலும் தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆசிரியர் சேவையில் நேர்முகப்பரீட்சை மூலம் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சபை அமர்விற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ண பிள்ளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர்-மாகாண அமைச்சர்களுடன் பேசி சிறந்த தீர்வினை பெற்று தருவதாகவும் வாக்குறுதியளித்தனர். விஷனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இன்றைய கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரினால் இதுபற்றி விசேட விவாதம் ஒன்றையும் நடாத்தியிருந்ததும் அதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமதினால் பதில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.