கருமலையூற்று பள்ளியிவாயலின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் ஹலீம் ஆரம்பித்துவைப்பார் என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் மோசமடைந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக காணப்பட்ட கருமலையூற்று வீதியின் புனர்நிர்மாண பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:-
என்னைப்பொறுத்தவரை இந்த நாள் கருமலையூற்று வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்றே கூறுவேன் ஏன் எனில் பல தசாப்தங்களாக இவ்வீதி அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் காட்சிப்பொருளாக மட்டுமே கானப்பட்டுவந்தது நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலம் முதல் இவ்வீதி புனர்நிர்மானத்துகான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அம்முயற்சி இன்று வெற்றியளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அத்துடன் உங்கள் பிரதேசத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாயல் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பள்ளிவாயல் இப்பாளிவாயளோடு சம்மந்தப்பட்ட பிரட்சினையை கடந்த மாதம் என்னுடன் ஹஜ் பயணத்தில் கலந்துகொண்ட கௌரவ அமைச்சர் ஹலீமுடன் உரையாடினேன் இன்ஷா அல்லாஹ் அமைச்சர் விரைவில் திருகோணமலைக்கு விஜயம் செய்வார் அவர் திருகோணமலையில் பாரவையிடும் முதல் இடம் கருமலையூற்று பள்ளிவாயலாகவே இருக்குமென்றும் அவர் வருகைதரும் போது இதன் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைப்பதாகவும் என்னிடம் வாக்குறுதியளித்துள்ளார்.