சில ஊடகவியலாளர்கள் மக்களையும், அரசியல்வாதிகளையும் குழப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் - உதுமாலெப்பை MPC

அபு அலா -
டகவியலாளர்கள் நடு நிலையாக செயற்படவேண்டும் யாரையும் யாரும் தாக்கும் வகையில் தங்களின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், பாலர் பாடசாலை கல்விப் பணியகமும் இணைந்து அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும், சிறுவர் பொருட்காட்சியையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று காலை (16) கலந்துகொண்டு கூறும்போது மேற்கணடவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சில ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளை மட்டும் வெளிப்படுத்தி மக்களையும், அரசியல்வாதிகளையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் வெருமனே பிரச்சினைகளை மட்டும் வெளிப்படுத்தி மக்களை குழப்பும் செயற்பாடாக அவர்களின் ஊடகப் பணி அமையக்கூடாது. அரசியல்வாதிகளுக்குள் ஏற்படும் கருத்து முறன்பாடுகள் யாவும் குறிப்பிட்ட சில மணி நேரம்தான். பின்னர் அது சரியாகி ஒரு தீர்வுக்கு வந்துவிடுவோம். இதனை சில ஊடகவியலாளர்கள் மக்கள் மத்தியில் பெறிதாக கொண்டு சென்று மக்களையும் எங்களையும் பாரிய குழப்பத்துக்குள்ளாக்கி விடுகின்றனர். 

ஒருவர் மீது சேறு பூசுவதும், அதனைக் கழுவுவதும் தான் ஊடக செயற்பாடுகள் என்று எண்ணி சில ஊடகவியலாளர்கள் செயற்பட்டும் வருகின்றனர். இவர்களின் மனநிலை முதலில் மாறவேண்டும். சமூகத்துக்கிடையில் ஒரு சமூக நல்லிணக்கத்தையும், சமூகத்துக்கு ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்திய ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கடமையாக ஊடகப் பணி அமையவேண்டும். ஊடகவியலாளர்களின் கதாபாத்திரம் உலகிலே மிக இன்றியமையாத ஒரு பாத்திரமாக அமைந்து காணப்படுகின்றது. அதற்கமைவாக நீங்கள் செயற்பட முன்வரவேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெருப்பு உள்ளது. அந்த விருப்பு வெருப்புக்காகவேண்டி மற்றவர்களை தாக்கும் முயற்சியில் அவர்களின் செயற்பாடுகள் இரிக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்தாகும். அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரமுண்டு. அதில் நான் ஒருபோதும் தலை போடுவதில்லை அதற்காக நான் அவர்களை வெருப்பதும் கிடையாது.

ஊடகவியலாளர்களை நான் மதிப்பவன். அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட மதிப்பையும் மரியாதையும் என்றும் வழங்கி வருகின்றேன். இதில் தவறியது கிடையாது. அவர்களுடன் நெருங்கிய உறவையும், அன்பையும் வைத்து வருகின்றேன் என்றார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய 4 வலயத்துக்கு கீழுள்ள தழிழ் மொழி முன்பள்ளி பாலர் பாடசாலை சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொருட் கண்காட்சியில் சிறுவர்களின் கற்பித்தலை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் கல்வியறிவு தொடர்பான பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குறித்த 4 கல்வி வலயங்களில் இருந்து வந்து பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முகம்மட் நஸீர் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எல்.தவம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் உளளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -