கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படும் தகவல் தொழிநுட்பம் ,ஆரம்பக்கல்வி ,சித்திரம் ,சங்கீதம் ,நடனம் நாடகமும் அரங்கமும் ,பௌத்த நாகரீகம் ,விவசாயம் ,சிங்களம், உடற்கல்வி ,வரலாறும் குடியுரிமைக் கல்வியும் ,இரண்டாம் மொழி சிங்களம் ,இரண்டாம் மொழி, தமிழ் போன்ற பாடங்களுக்கு வெற்றிடங்களுக்காக கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நோக்குடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேற்று 22.10.2016 (சனி) பரீட்சைகள் முடிவுற்ற நி
லையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் கோரப்படும் விண்ணப்பதாரிகளுக்கான வினாப்பத்திரத்தில் கல்வி தொடர்பான பொது அறிவு மற்றும் தேசிய கொள்கை தொடர்பான கல்வி சம்மந்தப்பட்ட விளக்கம் போன்ற கேள்விகள் உள்ளடக்கமாக சொல்லிவிட்டு அவற்றுக்கு மாற்றமாக இரண்டு கல்வி சார்ந்த இரண்டு வினாக்களை மாத்திரமே உள்ளடக்கிய நிலையில் மிகுதியாகவுள்ள அணைத்து வினாக்களும் சுற்று நிருபத்திற்கு மாற்றமாக பொது வினாக்களே அதிகமாக வினாப்பத்திரத்தில் உள்ளடக்க பட்டமை
நேற்று பரீட்சை எழுதிய அணைத்து கிழக்கு மாகாண பட்டதாரிகளை பொது சேவைகள் ஆணைக்குழு ஏமாற்றியதாக விசனம் தெரிவிக்கினறனர் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.எம்.அன்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மாத்திரமன்றி கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு நியமனம் தொடர்பில் பல தவறுகளை தொடர்ந்து செய்து வருவதாகவும்
கடந்த பட்டதாரிகள் நியமனத்தின்போதும் அநீதி இழைக்கபட்டகாகவும் கூறியதுடன் இது விடயமாக்க கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹமத் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்விற்கு குறித்த பரீட்சையினை இரத்துச் செய்து மீண்டும் முறையான பரீட்சை நடாத்தி உள்வாங்க நடவடிக்கை எடுக்க கோரி அவசர பிரேரணை ஒன்றை முன் வைத்துள்ளார்,
(கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடககப்பிரிவு )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -