புல்மோட்டை அரிசிமலை பிரதேசத்தில் கடந்த 2004 ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹாப் அரச சார்பற்ற நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டினை கடந்த 2008ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதமளவில் ஜப்பார் காலித் என்பவரின் வீடு விடுவிக்கப்பட்ட நிலையில் 24.10.2016 (திங்கள்) இன்று கடற்படையினர் உத்தியோகபூர்வமாக குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் குறித்த பகுதிகாக்கான கிராம சேவகர் சியாம் காணி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரியவர்களுக்கான காணிகள் வீட்டுடன் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீட்டு உரிமையாளர்களான ஜவ்பெர் முத்தலிப் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன
பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உரியவர்களுடன் சென்று பார்வையிட்டதுடன்
குறித்த வீட்டினையும் குடியிருப்புக்கு காணியினையும் படையினரிடமிருந்து மீட்பதற்காக பிரயத்தனங்கள் பல போராட்டங்களும் மக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்பட்டன அதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உட்பட பிரதேச முன்னாள் உதவி தவிசாளர் ஏ.பி.தௌபீக் உட்பட புல்மோட்டை பிரதேச பள்ளிவாசல் தலைவர் பிரதேசத்தின் ஒரு சில முக்கியஸ்தர்களும் இன்னும் குறித்த பிரச்சினை தொடர்பாக இன்னும் நீதிமன்ற வழக்கில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இது விடயமாக பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் .அன்வரால் பிரச்சினைகளை முன் வைக்கின்றபோது பல வழிகளிலும் உதவிய குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் ,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பாக இது விடயமாக பாராளுமன்றத்தில் பேசிய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் நினைவு படுத்துவதாக தனது ஊடக அறிக்கையில் கிழக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -