தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் -அன்வர் MPC



கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களால் தேசிய ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நேர்முகப்பரீட்சையின் மூலம் உள்வாங்க கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஆர்.எம்.அன்வரால் 27.10.2016 ம் திகதிய மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது முன் வைக்கப்பட்டு
உரையாற்றுகையில்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுனரின் கீழுள்ள பொது சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் பரிட்சைகள் அதன் மூலம் வழங்கப்படும் நியமனங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திருப்தியற்ற நிலைமையே காண முடிகிறது.

தொடர்ந்து இவற்றை கிழக்கு மாகாண சபை அனுமதிக்க முடியாது கடந்த ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போட்டிப்பரீட்சையில் குறித்த தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை குறித்து கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் ஒரு விதமாகவும் வட மற்றும் வட மத்திய மாகாணங்களில் வெறுமனே நேர்முகப்பரீட்சயின் மூலம் தோற்றி ஆங்கில ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ சேனா அவர்களால் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற தொனிப்பொருளில் ஆயிரம் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றில் 74 தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை நேர்முகப்பரீட்சையினாலே உள்வாங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்திலும் அவ்வாறே சேர்ந்துகொள்ளப்பட்ட நிலையில் கிழக்கிலுள்ளவர்களையும் உள்வாங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை ஒரு பொறிமுறையின் கீழ் கொன்டுசெல்லப்படுகின்ற அதேவேளை ஆளுனரின் கீழுள்ள பொது சேவைகள் ஆணைக்குழு மாத்திரம் சுயமாக இயங்குவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.

எனவே முதல் அமைச்சரும் அமைச்சர் வாரியமும் சரியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

குறித்த ஆங்கில டிப்ளமோ தாரிகள் 3 வருட கற்கை நெறியை முடித்து ஆறு மாதகாலம் பயிற்சிக்காக அரச பாடசாலைகளில் நியமிக்கப்பட்டு தரமான ஆங்கில ஆசிரியர்களாக வெளிவருகின்ற அவர்களுக்கு ஆங்கில துறை சார்ந்த நியமனத்தை தவிர வேறு ஒன்றுமே பெறமுடியாத நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்தது.

பொது சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வெளி மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் மற்றும் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை உள்வாங்குவதனால் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது அவ்வாறே வெளிமாகாணங்களில் விண்ணப்பங்கள் கோரும்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கப்படாதபோது கிழக்கு மாகாணம் மட்டும் என்ன விதி விலக்கா எனற கேள்வியையும் எழுப்பினர் அன்வர்.

2013 ம் ஆண்டின் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான 1134 வெற்றிடங்களில் ஆங்கில பாடத்திற்க்காக 478 வைத்துக்கொண்டு நடை முறைப்படுத்துவது ஒரு புறம் 2016 ஆண்டிற்கான 652 ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 390 ஆங்கிலம் ,விஞ்ஞானம்,கணிதம் போன்ற பாடங்களுக்கான பட்டதாரிகளின்
167 பெயர் ஆங்கில ஆசிரியர்களுக்காகவும் அவற்றில் வெளி மாவட்டங்களுக்கு 140 பெயரும் திருகோணமலைக்கு வெறுமனே 22 பெயர் மாத்திரமே செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

எனவே குறித்த தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நேர் முக பரீட்சையின் மூலம் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு முதல் அமைச்சர் அமைச்சர் வாரியத்தோடு இணைந்து ஆலோசனைகளை பெற்று இயங்கவேண்டும் எனவும் சபை தீர்மானத்தை நிறை வேற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதில் அழைத்து பேசுகையில் குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் எடுக்கப்படும் எனவும் இது விடயமாக்க தான் பிரதமர் ரணில் விசக்ரம சிங்க அவர்களோடு விரைவில் சந்திப்பு ஒன்றை மேற்கொல்லவதுடன் கிழக்கு மாகாண ஆளூனரோடும் பேசி தீர்மானத்தை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் முதல் அமைச்சர் கேட்போர் கூடத்தில்
தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை சந்தித்து பேசிய அவர் குறித்த விடயம் தொடர்பாக கூடிய கவனம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -