புல்மோட்டை தனியார் பனா கல்வி நிலையத்தின் முப்பெருவிழா நிகழ்வு 25.10.2016 (செவ்வாய்) பி .ப . 04.00 மணியளவில் அந்நிறுவனத்தின் தலைவர் சகோதரர் சல்மான் பாரீஸ் தலைமையில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் 5 ம் தர புலமைப்பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் கல்வி துறையில் சாதனை படைத்த மாணவர்களை கெளரவித்து சான்றிதழ்களும் அதீதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக திரு.இத்ரீஸ் (நளீமி) எழுத்தாளர் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் .அன்வர்,முன்னாள் உதவி தவிசாளர் ஏ.பி.தௌபீக்,முன்னாள் குச்சவெளி உறுப்பினர் எம்.ஐ.பதுர்தீன் உட்பட அதிதிகளாக சுகாதார பரிசோதகர் சுதார்தீன்,அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.