யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய போன்ற மூன்று மதங்களுக்கும் பொதுவான கிழக்கு ஜெரூசலத்தின் இஸ்லாமியர்களின் அல்-அக்ஸா பள்ளிவாசலின் யுதர்களின் ஓலமிடும் சுவர்(wailing wall), பாறையின் முகப்பு (dome of the rock) மற்றும் கிறஸ்துபிரான் பிறந்த பகுதியான பெத்லகம் ஆகியனவற்றினை உள்ளடக்கிய பகுதி உலகின் புராதன பகுதி (World Heritage Site) என UNESCO வினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பரதேசத்தில் முஸ்லிம்களின் சுதந்திரமான மதவழிபாட்டுக்கு இடையூறு விளைவிப்பதனை தடுக்கக்கோரும் பிரேரணை ஒன்றினை UNESCO வில் முன்வைத்து வாக்களித்தபொழுது இலங்கை அரசு பிரசன்னமாயிருந்தும் வாக்களிக்காமல் தவிர்ந்திருந்தமை கண்டனத்திற்குரிய செயலாகும்.
நல்லாட்சி நடைபெறுகின்றபொழுது மிக்க கொடுங்கோலாட்சியில் அப்பாவி மக்களின் உரிமைகள் மீறப்படுகின்பொழுது வாக்களிக்காமல் தவிர்ந்துகொண்டிருப்பது நல்லாட்சி அரசின் பங்காளிகளாக இருப்பினும் கண்டிக்காமல் இருக்கமுடியாத ஒரு செயற்பாடாகும்.
எனவே இது தொடர்பாக இச்சபை தனது கண்டனத்தினை அரசிற்கு தெரிவிப்பதற்காக இப்பிரேரணையை அவசரப் பிரேரணையாக இச்சபையில் முன்வைக்கின்றேன்.
இப்பிரேரணை எதிர்வரும் 27.10.2016 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனால் வாசிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -