எம்.வை.அமீர்-
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி (NDPHR) மற்றும் பாகிஸ்தான் சீன இளைஞர் கவுன்சிலர் இடையே முக்கிய சந்திப்பு 2016-10-28 ஆம் திகதியும் 2016-10-29 ஆம் திகதியும் கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சார்பில் அதன் ஸ்தாபாக தலைவர் முகைதீன் பவாவுக்கும் பாகிஸ்தான் சீன இளைஞர் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் ஆத்திக் ராஜவுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது என் டி பி எச் ஆர் சார்பில் முன்வைக்கப்பட்ட தொழில் பேட்டைகளை உருவாக்கி அதனூடாக தொழிலற்ரிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அதனூடாக நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதுடன் இளைஞர் யுவதிககளின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கிழக்கில் இளைஞர்களின் விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் பயிற்சிகளை வழங்கி அவர்களது திறமைகளை மேலும் அதிகரிப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் இதன்போது தூதுக்குழுவினரால் முகைதீன் பவாவிடம் உறுதியளிக்கப்பட்டதாகவும் இதன்போது நினைவுப்பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் முகைதீன் பவா ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்தார்.