ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
பாலஸ்தீனத்திற்கு ஜனாதிபதியின் வேண்டுகோளின் அடிப்படையில் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பாராளுமன்ற தூதுக்குழு நேற்று 26.07.2016 புதன் கிழமை பாலஸ்தீன் ஜெரூசலத்தில் உள்ள அல்-Qகுத்ஸ் பல்கலைகழகத்திற்கு ஜெரூசலம் பலகலைகழகத்தின் பதில் பீடாதிபதி டாக்கடர் ஹசன் டெவிக் தலைமையில் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டனர். இதன் பொழுது இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையினை பிரதி நிதிதுவப்படுத்தி பாலஸ்தீனில் தூதுவராக கடமையாற்றும் பெளசான் அனவர் ஆகியோரும் கலந்து கொண்டர்.
அல்-Qகுத்ஸ் பலகலை கழகமானது பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலினை அண்டிய ஜெரூசல பிரதேசத்திலும் வைத்திய துறையிலே முக்கிய பெயரினை தனக்கென பதித்து மத்திய கிழக்கிலேயே பிரசித்தி பெற்ற பலகலைகழகமாகும். அந்த வகையிலே இலங்கை பலகலைகழகங்களில் வைத்திய துறையிலே கல்வி கற்கும் மாணர்களுக்கு அல்-Qகுட்ஸ் பலகலைகழகத்தில் கல்வி கற்பதற்கான புலமை பரிசில்கள் வழங்குவதற்கும் இரு நாடுகளிலும் உள்ள பல்கலை கழகங்களில் கல்வி கற்பிற்கப்படும் நவீன விதி முறைகளை பரிமாற்றிக்கொள்வது சம்பந்தமாக மிக நீண்ட நேரம் இலங்கைக்கான தூதுக்குழுவினருடன் பல்கலைகழக நிருவாகம் கலந்துரையாடி சிறந்த முடிவுகள் எட்டப்பட்டதாக பாலஸ்தீனத்திற்காக இலங்கை தூதுவர் பெளசான் அன்வர் தெரிவித்தார்.