அமைச்சர் நஸீரிடம் மன்னிப்புக்கோரினார் RDHS அலாவுதீன்..!

சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக என்னால் எழுதப்பட்ட கடிதத்தினை நிராகரித்து இதனை மன்னித்துக்கொள்ளுமாறு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்தார். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிப்பாலவின் உத்தரவிற்கு அமைவாக இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கு எதிராக கடந்த வாரம் முறையற்ற விதத்தில் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் நிராகரிக்கின்றதுடன் இதற்காக மன்னித்துக்கொள்ளுமாறும் இது தொடர்பான கடிடத்தினை இவ்விடத்தில் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்தார். மேலும், நாளை முதல் எனது கடமைகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி மேற்கொள்ளவுள்ளதுடன் என்னால் வெளியான செய்திகளையும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முருகானந்தன், சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், உதவிச் செயலாளர் உசைனுடீன் ஆகியோர் முன்னிலையின் மண்ணிப்புக் கடிதத்தினையும் கையளித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -