அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு முஸ்லீம் மகளிா் கல்லுாாியில் கடந்த 5 வருடங்களாக அதிபராகவும் SLEAS - Class 1 PHD கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு முஸ்லீம் பெண் அதிபா் தனது 35 வருட கல்விச்சேவையில் இருந்து நேற்று (20) ஓய்வு பெற்றுச் சென்றாா். அக் கல்லுாாியின் ஆசிரியா்கள், பிரதி அதிபா்கள், மாணவிகள் மலா் மாலைகள், மலா்ச் சென்டுகள் கொடுத்து தமது பிரியாவிடை நடாத்தினாா்கள். இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா்காளன எம். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம் பௌசி மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவிகளும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய அதிபா் - கலாநிதி ஹர்ஜான் மன்சூர் -
நான் 1982 ஆசிரியா் தொழில் இருந்து கல்வி அமைச்சு, ஆசிரியக் கலாசாலை விரிவுரையாளா், மற்றும் சாாக் நாடுகளின் பிரதிப்பணிப்பாளராக பணியாற்றிவிட்டு அமைச்சா் பௌசியின் அழைப்பின் பேரில் 2011ஆம் ஆண்டு அதிபராக முஸ்லீம் மகளிா் கல்லுாாியை பொறுப்பேற்றேன். இங்கு இருந்த சகல நிர்வாகம், மற்றும் பிரதி அதிபா்கள் உப அதிபர்கள் பிரசச்சினையெல்லாம் உடன் கல்வியமைச்சு சென்று அவா்களை நியமித்தேன் சகல நிர்வாகங்களையும் பிரித்து அவா்களது சேவையும் பெற்றக் கொண்டேன். இக் கல்லுாாியை திறம்பட எடுத்துச் செல்லக் கூடிய வகையில் தற்பொழுது சீரிய முறையில் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
இன்றுடன் எனது சேவை முடிவடைகின்றது. இந்தக் கல்லுாரிக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் இலங்கை நிர்வாகம் தரம் 2 அல்லது அதிபா் சேவை 1 சித்தியடைந்த ஒரு முஸ்லீம் பெண்னை கல்வியமைச்சோ அல்லது இலங்கை கல்வி சேவை ஆணைக்கு குழு நியமிக்கும் . யாா் இங்கு வந்தாலும் இக் கல்லுாாி சீராக நடைபெறும். அந்த அளவுக்கு பழைய சீர்கேடுகளை நிமிா்த்தி வைக்கப்பட்டுள்ளது.
எனக்கு 60 வயது முடிந்ததும் இன்றைய நிகழ்வில் மலா் மாலைகளாலும், புச் சொன்டுகளாலும், தமிழ், சிங்கள முஸ்லீம் ஆசிரியைகளின் கவிதைகள், வாழ்த்துக்கள் பெற்று மலா் மாலை சூடி நாம் வெளியில் போகவேண்டும். மீண்டும் 61 வயதுக்கும் சேவை நீடிப்புக் கேட்டு ஒரு போதும் இருக்கக் கூடாது. அது பாடசாலைக்குள் மேலும் பிரச்சினையை உருவாக்கும். எனது 5 வருட காலத்திற்குள் என்னால் முடிந்த சகல சேவையும் இப் பாடசாலைக்கு செய்துள்ளேன். இந்த நாட்டில் முஸ்லீம் சமுகத்தின் பெண்களுக்கென இருக்க கூடிய ஒரே ஒரு பாடசாலை முஸ்லீம் மகளிா் கல்லுாாியாகும். கடந்த புலமைப்பரிசில் கூட 27 மாணவிகள் சித்தியடைந்துள்ளனா் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதல் மாணவியும் இந்தப் பாடசாலையே சாரும்.
நான் வெளியில் போனபிறகு நீங்க போனபிறகு இந்தப் பாடசாலை விழுந்துவிட்டது என்று என்னிடம் யாரும் கண்டால் சொல்லக் கூடாது இங்கு தமிழ் சிங்கள. முஸ்லீம் என சகல இன ஆசிரியைகளும் உப அதிபா்களும் உள்ளனா். 3 மொழிகளிலும் இங்கு கல்வி போதிக்கப்படுகின்றது. ஆகவே இக் கல்லுாாி மேலும் முன்னேறிச் சென்றால் தான் தனக்கும் இந்தப் பாடசாலையின் கல்விச் சமுகத்திற்கு நாம் செய்த சேவையால் நன்மை கிட்டும் என கல்லுாாி அதிபா் ஹர்ஜான் மன்சூர் அங்கு தெரவித்தாா்.