அண்மையில் யாழில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலையுண்டதையடுத்து, வடக்கின் முக்கிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ். சம்பவத்தையடுத்து சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சுன்னாகம் சம்பவத்திற்கு ஆவா எனப்படும் ஒரு குழு உரிமை கோரி துண்டுப்பிரசுரமும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ஆவா எனப்படும் குழுவினரை கண்டுபிடிக்கும் நோக்கிலும் வடக்கின் முக்கியமான இடங்களில் பொலிஸாருடன் அதிகளவான விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வடக்கின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் நடமாட்டம் சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.