அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-வேலுர் கடற்கரைப்பகுதியில்: கடற்கரைகளில் காணப்படுகின்ற கூலங்களை புதைப்பதற்காக குழியொன்றினை வெட்டிய வேளை நேற்று மாலை (08) டி 56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரையோரப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்த நிலாவௌி பொலிஸார் இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்ற இத்துப்பாக்கி யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் நிலாவௌி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.