அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய முன்னாள் நீதிபதிக்கு நீதிமன்றில் வைத்து ஏசிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 01 வருட சிறைத்தண்டனை வழங்கி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி நளினி கந்தசாமி நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2015.07.15ஆம் திகதி நீதிமன்றுக்கு விசாரணைக்காக வந்த நபர் நீதவானை திறந்த நீதிமன்றில் வைத்து ஏசிய குற்றத்துக்காக குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அரச கடமையை செய்ய விடாது தடுத்தல், நீதித்துறையை சீர்குலைத்து அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கு அமைய இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.