ஹம்பாந்தோட்டை துறைமுகமும், விமான நிலையமும் குத்தகைக்கு - 01பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கிறது

அஷ்ரப் ஏ சமத்

பிரதம மந்திரி ரணில்விக்கிரம சிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக இலங்கை எழுச்சி பெறுவதற்கு உலகின் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் முன்னேற்றுவதற்கு திட்டங்கள் வகுக்ப்பட்டுள்ளன. அவைகள் அடுத்த 2 வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும். இதற்காக இலங்கையின் பல பிரதேசங்கள் பல வலையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. என மத்திய வங்கி ஆளுனா் தெரிவித்தாா்.

இலங்கை பல்கழைக்கழகங்களில் கற்ற பெண்கள் அமைப்பின் 75வது ஆண்டுப் பொதுக் கூட்டம் இன்று(12) பொரளையில் உள்ள இவ் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு அமைப்பின் தலைவி சீலா ஈபெட் தலைமையில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுணா் கலாநிதி இந்திரிஜித் குமாரசுவாமி இலங்கையில் பொருளாதாரத்தில் அடையவுள்ள சா்ந்தப்பங்களும் அவற்றுக்காக எதிா்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் - 

கொழும்பு சகல நிர்வாக வலயங்கள் பல புகையிரதம்வசதிகள் , அமைப்பதற்கு யப்பாண் நாடு முன்வந்துள்ளது. அத்துடன் பாதைகள் அபிவிருத்திளும் முன்னெடுக்கப்படும். அத்துடன் கொழும்பில் காலிமுகத்திடலில் உள்ள 269 ஹெக்டயா் கடல் சாா்ந்த துறைமுக நகரம் ” போட் சிட்டி,” துபாய், சிங்கப்புர் நாடுகளுடன் இணைந்து சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. 

ஹம்பாந்தோட்டையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட துறைமுகமும், விமான நிலையமும், 99 வருடங்களுக்கு சீன அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமேரிக்க டொலா் வருமானமாக கிடைக்கப்பெறுகின்றது. இந்த துறைமுகம் ஊடாக இந்திய உற்பத்திகள் சீமெந்து போன்ற களஞ்சியஙக்ள நிர்மாணித்து சினா முன்னெடுக்க உள்ளது அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 50 ஆயிரம் ஏக்கா் காணியும் வழங்கப்பட உள்ளது. . இதன் ஊடாக மொண்ரகாலை, ஊவா போன்ற பிரேதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படும்.

இதே போன்று திருகோணமலை வலயங்களை சகல வரைபடங்களை வரைவதற்கு சிங்கப்புர் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. . இதில் பல உப திட்டங்களை யப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் வழங்கப்பட உள்ளது. 

ரஜரட்ட அநுராதபுர பிரதேசங்கள் - யப்பானுக்கும் மற்றும் குருநாகல், குலியாப்பிட்டிய போன்ற நகரங்கள் கொரியா போன்ற நாடுகளுக்கும், வழங்க்பட்டுள்ளன. இலங்கையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகாத்தல்கள் உள்ளனா். அவா்களுக்கு 30 வருடங்களுக்கு மேல் ஓய்வுதிய சம்பளம் வழங்கப்படுகின்றது. இதற்காக பாரிய நிதியை இலங்கை வரி அறிவீட்டுப் பணத்தினை செலுத்த வேண்டியுள்ளது. இதில் கூடுதலான பாதுகாப்புத்துறையில் அரச உத்தியோகத்தா்கள் உள்ளனா். இலங்கையில் ஒரு பொதுநிருவாக சேவையில் நிர்வாக உயா் பதவி வகிக்கும் ஒரு செயலாளக்கு ஆகக் கூடிய சம்பளம் 75ஆயிரம் ருபாவையே மட்டுமே பெறுகின்றாா். ஆனால் ஒரு தணியாா் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் 2- 25 இலட்சம் ருபா வரையிலான சம்பளத்தினைப் பெறுகின்றனா். இதனால் அரச நிருவாக அதிகாரிகள் இலங்கையில் குறைந்த சம்பளத்தினையே பெறுகின்றனா். ஆனால் அவா்களுக்க ஓய்வு பெறும் காலத்தில் சுமாா் 30-35 வருடங்கள் ஓய்வுதியம் வழங்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் விவசாய உற்பத்தியில் 35 வீதம் மட்டுமே இருந்த போதிலும் அதில் 7.8 வீதமே வருமானம் கிடைக்கின்றது. ஆனால் புதிய நவீன முறைக்கு தமது உற்பத்திகளை மாற்றுவோமேயானால் நாம் முன்னேற வாய்ப்புகள் உண்டு. விவசாயத்திற்காக இலவசமாக தண்னீா் வசதிகள், மாணிய விலையில் பசளை வழங்கிய போதிலும் நமக்கு 6 வீதமே அதில் வருமாணம் உள்ளது. இந்த நாட்டில் வாழும் ஒருத்தரின் தலா வருமானம் 2 அமேரிக்க டொலராகும். மேற்படி வர்த்தக வலயங்கள் அபிவிருத்தி கண்டால் எமது நாட்டில் இருந்து தொழிலாளா்களாகவும், பணிப்பெண்களாகும் மத்திய கிழக்கு நாடுகள் போகும் மனித வழம் குறையும். நமது நாட்டிலேயே அவா்கள் தொழில்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. 

உலக வங்கி மற்றும் ஜ.எம்.எப் (IMF) , ஜரோப்பிய யுணியன் போன்ற நிறுவனங்கள் எமது நாட்டுக்கு அவா்கள் சில சலுகைகளுக்காக பல விதிகளை முன்வைக்கின்றனா் .ஆனால் மலேசியா, சிங்க்பபுர் போன்ற நாடுகளில் ஜ.எம். எப் என்ற அமைப்பே அங்கு கிடையாது. அவா்கள் தமது சொந்த நாட்டின் மொத்த வருமாணத்தில் நடைமுறைப்படுத்த முடிகின்றது. என மத்திய வங்கியின் ஆளுணா் கலாநிதி குமாரசுவாமி அங்கு உரையாற்றினாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -