அபு அலா -
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியசாலை விடுதி எழுதுனர்களுக்கான 07 பேருக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து நேற்று (18) வெள்ளிக்கிழமை நியமனங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அவர் தெரிவிக்யைில்,
கடந்த பல வருடங்களாக கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் காணப்பட்டு வந்த விடுதி எழுதுனர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 6 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைத்தோம். இருந்தும் இந்த வெற்றிடங்கள் பூரணமாக நிரப்பப்படவில்லை. இது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. இதனை சரி செய்யவேண்டும் என்ற நோக்கில் நேற்று 07 பேருக்கான நியமனங்களை வழங்கி வைத்தேன்.
இன்னும் சில வெற்றிடங்கள் காணப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை மிக விரைவில் நிரப்பப்படும் என கிழக்கு மாகாண சுகாதார கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கபபெத்தி, சுகாதார அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் யு.எம்.வாஹிட், சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன், ஆயுர்வேத திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.