ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலசவ உம்ரா திட்டத்தின்> 100 பேர் அடங்கிய 5ஆவதும் இறுதியுமான குழு இன்று வியாழக்கிழமை புனித மக்கா நகர் நோக்கி புறப்பட்டது.
இக்குழுவில் பயணிக்கும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு வத்தளை> மாபோல ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஹிரா பௌண்டேஷன் தலைவரும்> புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு இமாம்கள் மற்றும் கதீப்மார்களை வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்>
“ஹஜ்> உம்ரா கடமைகளுக்கு செல்பவர்களை வழியனுப்பி வைப்பவர்களாகவும்> பார்வையாளர்களாகவுமே பள்ளிவாசல்களில் உள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் இருந்தனர். அவர்களுக்கும் புனித மக்கா நகருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனை கருத்திற்கொண்டே ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இலவச உம்ரா இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக இன்று 5ஆவது குழுவையும் வழியனுப்பி வைக்கின்றது. எதிர்காலத்தில் மத்ரஸாக்களில் சேவையாற்றும் உலமாக்களை மையமாக வைத்தும் இலவச உம்ரா திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் ஹிரா பௌண்டேஷன்> பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை கௌரவிக்கும் நோக்குடன் இலவச உம்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 55 வயதை பூர்த்தி செய்த, இதுவரைக்காலம் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்படு புனித மக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.