விமல் வீரவன்சவிடம் 100 மில்லியன் கோரி JVB தொடர்ந்த வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்ண இன்று அறிவித்துள்ளார்.

“நெத்த வெனுவட்ட எத்த” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளமைக்காக விமல் வீரவன்சவிடம் 100 மில்லியன் கோரி குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புலமைச்சொத்து சட்டத்தை மீறி அச்சிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” என்ற நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு தடைவிதித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -