சர்வோதயத்தில் 100 பேருக்கு வேலை வாய்ப்பு

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்ட சர்வோதயம்-உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம் (வூஸ் )டன் இணைந்து வேலையற்ற 100 இளைஞர் யுவதிகளுக்கு நான்கு தொழில்சார் துறைகளில் தொழில்பயிற்சிகளை வழங்குவதாக சர்வோதய திட்டமிடல் இணைப்பாளர் எம்.கே.கார்த்திக் தெரிவித்தார்.

இப்பயிற்சியில் சுற்றுலாத்துறை,கட்டுமாணத்துறை, மோட்டார்வாகனத்துறை, தகவல்தொழிநுட்பத்துறை ஆகிய நான்கு துறைகளில் தொழில்வாய்ப்பொ
ன்றைப்பெறுவதற்காக மூன்று மாத வகுப்புநிலை பயிச்சியும் மூன்று மாத செய்முறைப்பயிச்சியும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை சர்வோதய மாவட்ட அலுவலக கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.

மேலும் 2006ஆம் ஆண்டுமுதல் 2015 வரையிலான காலபகுதில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் மூவாயிரம் இளைஞர்களுக்கு சர்வோதயத்தினூடாக தொழிற்பயிச்சிகள் வழங்கப்பட்டுள்ளன . அவர்களில் பலர் தொழில் செய்கின்றனர்.

2016ஆம் ஆண்டு பயிச்சிகளைப்பெற்ற 100 இளைஞர்கள் யுவதிகள் தற்போழுது தனியார் துறை யில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் .நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கேட்ப சிறந்த பயிச்சிகளை வழங்கி மேம்படுத்தும் வேலைத்திட்டத்திக்கு அமைவாக உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம் உதவ முன்வந்துள்ளதாகவும் நாளாயிரம் பயிலுனர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வேலைக்கமர்த்துவதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

இப்பயிச்சிக்காலத்தின் போது மொழிப்பயிச்சி தலைமைத்துவப்பயிச்சியும் வழங்கப்படும் எனவும் இதற்கான நிதியினை கிழக்கு மாகாண சபை வழங்கியுள்ளது .

தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன அவ்வேலைவாய்ப்புக்கேற்ப இளைஞர்களை நாங்கள் தயார்படுத்தவேண்டியுள்ளது .இதனை முன்னிட்டு குச்சவெளி, கந்தளாய் திருகோணமலை, மொறவெவ, பிரதேசங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகின்றோம்.

17 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் யுவதிகள் .. பயலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்களைப் பெற 0264931322 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -