நீரிழிவு நோயினால் நாளொன்றுக்கு 100 பேர் இறக்கின்றனர் - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா -
லகில் 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 21 இலட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது இலங்கையின் சனத்தொகையில் 10.3 சதவீதமாகக் காணப்படுகின்றது என கிழக்கு மாகாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இன்று(21) அக்ரைப்பற்று நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகயில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தொற்றா நோயான நீரிழிவு நோயானது இளைஞர்கள் மத்தியிலும் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணிகளில் இப் போது நீரிழிவு நோய் ஏழாவது அடத்தையும் பெற்றுள்ளது.

இந்நோயினால் உலகில் வருடம் ஒன்றிற்கு 15 இலட்சம் பேர் மரணிக்கின்றனர். இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு இந்நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 100 ஆகக் காணப்படுகின்றது.

இலங்கையில் தொற்றா நோய் பாரிய சவாலாக மாறிவருகின்றது. இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் தொற்றா நோய் பெரும் தாக்கத்தினை செலுத்துவதுடன் அரசாங்கத்தின் சுகாதாரத்துறைக்கான செலவீனங்களும் அதிகரித்துச் செல்வதனை காணக்கூடியதாக உள்ளது.

பாதகமான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சி இன்மை, புகையிலை, மதுப்பாவனைகள், மன அழுத்தம், சோம்பலான வாழ்க்கைப்பாங்கு என்பன இந்த நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

இந்த ஆபத்தான நோயிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள், முன்னேற்பாடுகள் பிரதேச மட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். நோய்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொண்டு ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதற்கான வழிவகைகள் தூதப் படுத்தப்பட வேண்டும் என்றார்.

அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புனர்வு ஊர்வலத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், தொற்றா நோய் வைத்திய பொறுப்பதிகாரி டாக்கடர் ஹாரீஸ் உள்ளிட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஊழியர்கள் ஊர்வலதத்தில் கலந்து கொணடனர். 

ஊர்வலத்தின் போது நீரிழிவு நோய் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலகத்தில் கருத்தரங்கும் நடைபெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -