13 ஆவது திருத்தத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டு அத​னை தாமதப்படுத்துவது சிறந்தததல்ல - கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகையில் மாகாண ஆசிரியர்களை வௌி மாகாணங்களில் நியமிப்பதனை கிழக்கு மாகாணத்தை கல்வியில் புறக்கணிப்பதாகவே கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

​​கிழக்கு மாகாணத்திற்கு வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாணத்து வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை தமது மாகாணத்திலேயே நியமிக்கச் செய்வதற்கு பல போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக தெரிவித்தார்

இதே போன்றதொரு சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றதுடன் போராட்டங்களை நடத்தி அதை பெற்று கொண்ட போது இனிமேல் அவ்வாறு நடைபெறாது என கல்வியமைச்சால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக முதல​ைமச்சர் சுட்டிக்காட்டினார்

எவ்வாறாயினும் இம்முறையும் மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்கு உள்ளே நியமிப்பதற்கு பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

அடுத்த ஆண்டும் இந்த நிலைமை தொடரக் கூடாது எனவும் இனிமேலும் கல்வித்துறையில் கிழக்கு மாகாணத்துக்கு மத்தியரசு அநீதியிழைக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தினார்,

மாகாண பாடசாலைகள் தொடர்பான முழுமையான கல்வியதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்த முரண்பாடுகளை தீர்க்க முடியுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டில் எவரும் இருக்கு முடியாது எனவும் அரசியலமைப்பில் உள்ள அதனை அமுல்ப்படுத்துவதாக சத்தியப் பிரமாணம் செய்து விட்டு தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்வது சிறந்தது அல்ல எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

13 திருத்தம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்குமானால் ஆசிரியர்கள் வௌிமாகணங்களில் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னர் மாகாண சபையை ஆட்சி செய்தவர்கள் விட்ட தவறினாலேயே ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வௌி மாகாண நியமனம் போன்றவை இன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

அவர்கள் அன்று இந்தப் பிரச்சினைகள் குறித்து பாராமுகமாக இருந்தமையினாலேயே இந்தப் பிரச்சினைகள் இன்று விஸ்வரூபமெடுத்துள்ளதாகஅவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமது ஆட்சி காலத்திற்குள் மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் முதலமைச்சர் இங்கு உறுதியளித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிப்புச் செய்யப்படுவதன் ஊடாக நாடு அதள பாளத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் என முதலமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

ஏற்கனவே நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ள நிலையில் அரசியல் தீர்வு காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிடமே மாகாணத்தின் எதிர்காலம் தங்கியுள்ளதுடன் அவர்கள் அதனை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதன் போது தமது சொந்த மாகாணத்திலேயே நியமனம் பெற்றுக் கொடுக்க பல போராட்டங்களை நடத்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு ஆசிரியர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -