14வது நகைச்சுவை சங்கமம் எதிர்வரும் 14.11.2016 அன்று போயா தினம் அன்று 4.00 மணிக்கு கொழும்பு-12 பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாஷிம் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
முன்னாள் போக்குவரத்து பொலீஸ் அத்தியட்சகர் திரு கே.அரசரட்ணம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.ஸப்ரி கலந்துக் கொள்வுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கௌரவ அதிதிகளாக பிரபல சமூக சேவகி திருமதி திலகவதி ஈஸ்வரன், முன்னாள் அதிபர்; திருமதி என்.யு.எம்.ஏ.காதர், சக்தி தொலைக்காட்சி முகாமையாளர் திருமதி உமாசந்திரா பிரகாஷ், பிரபல சமூக சேவகி திருமதி பவாசா தாஹா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை நகைச்சுவை சங்கமம் நிகழ்வில் ‘’ நகைச்சுவை சிரிப்பதற்கா? சுந்திப்பதற்கா? ‘’ எனும் மகுடத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும். இப்பட்டிமன்றத்தில் அணிசார்ந்து அசத்துவோர் பிரதி அதிபர் முன்னாள் அரச அதிபர் தில்லை நடராஜா, திரு ஏ.எஸ்.எம்.பீலிக்ஸ், சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா, கலாநிதி வைத்தமாநிதி, அறிவிப்பாளர் திருமதி ஷாமிலா ஷெரீப் முஸ்டீன், ஊடகவியலாளர் திரு மணி ஸ்ரீகாந்தன், ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.