நுரைச்சோலை 15 பில்லியன் ரூபா தரகுப் பண விவகாரம் : மஹிந்தவின் பதில்

நுரைச்சோலை நிலக்கரி மின்சக்தி செயற்றிட்டத்திலிருந்து ராஜபக்‌ஷ அரசாங்கம் 15 பில்லியன் ரூபா தரகுப் பணத்தைப் பெற்றள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டியிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் வெளியிடப்பட்டிருந்த கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் “அலபலு ஆர்திகய” புத்தகத்திலும் அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில் அவர், நுரைச்சோலை செயற்றிட்டத்தின் முதற்கட்டத்துக்கான மதிப்பீடு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த போதிலும், சில மாதங்களில் அது 455 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்ததாகவும் கூறி, 155 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (15 பில்லியனுக்கும் அதிகம்) ராஜபக்‌ஷக்களால் களவாடப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக பின்வரும் விடயம் குறிக்கப்பட வேண்டியதாகும்.

ஜூன் 9, 2005 இல் சமர்ப்பிக்கப்பட்ட நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தின் முதற்கட்டத்துக்கான ஆரம்ப மதிப்பீடு 398 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், அமைச்சர் ரணவக்க தெரிவித்ததைப் போன்று 300 அமெரிக்க டொலர்கள் அல்ல. ஜூலை 2005 இல் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 30, 2005 இல் மதிப்பீடானது 471 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முறையாக உயர்த்தப்பட்டது. இந்த மீளாய்வானது திருமதி குமாரதுங்கவின் காலத்தில் இடம்பெற்றது, எனவே மதீப்பீட்டை உயர்த்துவதனூடாக பணத்தைக் கொள்ளையிடும் குற்றச்சாட்டு திருமதி சந்திரிகாவின் அரசாங்கத்துக்கே பொருந்தத்தக்கதாகும். உண்மையில், ராஜபக்‌ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், திருவாளர்கள் எஸ்.பி. திவாரத்ன, லக்‌ஷ்மன் ஆர். வட்டவல, எம்.எம்.சி ஃபெர்னினான்டோ ஆகியோரை பேரம்பேசும் செயற்குழுவாக அமைச்சரவை நியமித்து, குறைவான விலையாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பேரம்பேசியிருந்தது. ஜூன் 2005 இலிருந்து ஓகஸ்டுக்குள் மூன்று மாதத்துக்குக் குறைவான காலத்தில், 398 இலிருந்து 477 மில்லியன் அமெரிக்க டொலர்களாக நுரைச்சோலை மன்சக்தி நிலையத்தின் மதீப்பீடு சடுதியாக உயர்ந்தது என்பதை பொதுமக்களுக்கு திருமதி குமாரதுங்க விளக்கமளிப்பதைத் தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் மேலும் தொடர முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -