பிரமாண்ட பரிசு மழையுடன் 'கிங் கோசஸ் வெற்றிக்கு கிண்ணம்' 15 இல் ஆரம்பமாகிறது...!



சுலைமான் றாபி-
சாய்ந்தமருது கிங் கோசஸ் விளையாட்டுக்கு கழகத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அணிக்கு 7 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் மென்பந்து மின்ளொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை நடாத்துவது சம்பந்தமான அணிகளின் வீரர்களுக்கிடையிலான விஷேட கலந்துரையாடலும், போட்டி நேர அட்டவணைகளை தெரிவு செய்வதுமான நிகழ்வு நேற்றைய தினம் (06) சாய்ந்தமருது சி பிரீஸ் ஹோட்டல் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. 

விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். ரஜாய் தலைமையில் இடம்பெற்ற இவ்விஷேட கலந்துரையாடலில் கிங் கோசஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். முஹம்மட், செயலாளர் ஏ.சி.எம். நிசார், பொருளாளர் எம்.ஐ. பஸ்மீர் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் இச்சுற்றுத் தொடரில் பங்கு பற்றும் ஏனைய கழகங்களின் வீரர்களும் கலந்து கொண்டனர். 

மென்பந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக பிரமாண்ட பரிசு மழையுடன் இடம்பெறவுள்ள இம்மின்னொளி கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் இருந்து அணிகள் கலந்து கொள்ளவுள்ளது. 

மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கிண்ணியா மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் இருந்தும், மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரைக்குமான கிழக்கு மாகாண அணிகளும் இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கு பற்றவுள்ளன.

மொத்தமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களைக் கொண்ட 48 கிரிக்கெட் அணிகள் இந்த இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்கு பற்றவுள்ளதோடு, இந்த சுற்றுத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 25,000 ரூபா பணமும், வெற்றிக்கு கிண்ணமும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளதோடு, இரண்டாம் நிலையினை பெறும் அணிக்கு 15,000 ரூபா பணமும், வெற்றிக்கு கிண்ணமும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது. 

இதேவேளை இந்த இரவு நேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 15 ம் திகதி சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடரிற்கு கரையோர மாவட்ட நடுவர் சங்க உறுப்பினர்கள் நடுவர்களாக செயற்படவுள்ளதோடு, இந்த சுற்றுத் தொடரில் மோதவுள்ள அணிகள் குலுக்கல் முறையிலேயே தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -