முஹம்மட் ஜெலீல்-
அரசின் சுற்றுநிருபத்தின் இல: 04/2016 க்கு, அமைய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவுத் தேர்தல் 10-11-2016 இன்று கமு/-அல்- மினா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எல்.எம். நிஹாறுதீன் அவர்களின் தலமையில் அமைதியான முறையில் சிறப்பாக இடம்பெற்றது.
33 மாணவ பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நோக்கில் இடம்பெற்ற இத்தேர்தலில் 45 மாணவ மாணவிகள் போட்டியிட்டனர்.
இத்தேர்தல் நிலையத்திற்கு வலய கல்வி பணிமனையின் மாணவ பாராளுமன்ற இணைப்பாளர் எம்.எ.எம். ரசீன் அவர்கள் வருகைதந்ததோடு இத்தேர்தல் கண்காணிப்பு பணியில் அல்-மினா வித்தியாலய ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களை அமைதியான முறையில் வாக்களிக்கச் செய்தனர் .