காத்தான்குடி பிரதேசத்தில் இங்கிவரும் மொனாஷ் ஆங்கில அகடமியின் 2016 வருடாந்த பரிசளிப்பு விழா





பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு –காத்தான்குடி பிரதேசத்தில் இங்கிவரும் மொனாஷ் ஆங்கில அகடமியின் 2016 வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

மொனாஷ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி.அஷ்றப் அலியின் ஒருங்கிணைப்பில் மொனாஷ் ஆங்கில அகடமியின் அதிபர் ஜனாபா ஹில்மியா மூபின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் பல்வேறு ஆங்கில பரீட்சைகளில் திறமையான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள சான்றிதழும்,பதக்கமும், கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு மொனாஷ்; ஆங்கில அகடமி மாணவ மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பாட்டு,கதை,கவிதை,நாடகம்,பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்தோடு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்; ஹிஸ்புல்லாஹ்வுக்கு மொனாஷ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி.அஷ்றப் அலி உள்ளிட்ட அகடமி நிருவாகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ்,சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன்,டாக்டர் பதுர்நிஸா காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் முஹம்மட் றுஸ்வின், காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,முன்னாள் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பிரிவு இணைப்பாளர் சன்சிர்,காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் சத்தார்,உட்பட பாடசாலை அதிபர்கள்,ஆங்கில ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -