பட்ஜட்- 2017 - தூக்கத்தில் MPக்கள்

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருப்பது போன்று புகைப்படங்கள் சில வெளியாகி இப்பொழுது சமூக வலைத்தளங்களில் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது.

நேற்றைய தினம் ரவி கருணாநாயக்க 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதன்போது நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

எனினும் 2017ஆம்ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டமானது, தற்பொழுது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பொது மக்களுக்கு அதிகளவில் சலுகைகளை கொடுப்பது போன்று அரசாங்கம் காட்டிக் கொண்டு மறுபுறத்தில் வரிச்சுமைகளை மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியிருப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சுமத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக பெரும்முதலாளிகளுக்கு இந்த வரவுசெலவுத் திட்டமானது சாதகமானதாக தென்படும் அதுவேளை சாதாரண மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போன்றே அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

இன்னொரு புறத்தில், இந்த வரவு செலவுத்திட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் அரசாங்கம் பழைய மாப்பிள்ளைக்கு புது வேஷ்டி சட்டைகளைக் கொடுத்து, அலங்காரம் செய்திருக்கின்றதே தவிர அதில் மக்களுக்கு பயன்படும் அளவில் எதுவும் இல்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.


முன்னயை அரசாங்கம் தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறு நாட்டின் பாதுகாப்பிற்கு அதிகளவில் நிதியொதிக்கியது போன்றே இந்த அரசாங்கமும் தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

இதேவேளை நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருடாவருடம் அரசாங்கம் பாதுகாப்பிற்காக பெருந்தொகை நிதியை செலவு செய்வதும் இப்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.


நேற்றைய தினம்வெளியிடப்பட்டிருக்கும் இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கிக்கொண்டு இருப்பது போன்ற படங்கள் இப்பொழுது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.


எதுவாயினும் அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத்திட்ட வாசிப்பே தூக்கத்தோடு ஆரம்பித்திருக்கிறது. இனி இது அடுத்தாண்டில்அபிவிருத்திக்கு உதவுமா? அல்லது இன்று தூங்குவதைப் போன்று தொடர்ந்து தூங்குமா என்பதைத் தொடர்ந்து வரும் நாட்கள் தான் பதில் சொல்லும்.\











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -