சிறுபான்மையினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் பொது­ப­ல­சே­னாவின் 22 கோரிக்கைகள்..!

பெளத்த மதத்­துக்கும், பெளத்த கலா­சா­ரத்­துக்கும் சவால்கள் ஏற்­பட்­டுள்­ளதால் சிங்­கள இளை­ஞர்கள் கொதிப்­ப­டைந்­துள்­ளார்கள். அவர்­களை நாம் சமா­தா­னப்­ப­டுத்தி எமது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்ளோம். சங்க பாது­காப்புச் சபையின் கோரிக்­கை­க­ளுக்கு 14 நாட்­க­ளுக்குள் தீர்வு கிடைக்­கா­விட்டால் எமது கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து அவர்­களை நாம் விடு­வித்­து­வி­டுவோம். அதன் பிறகு நாட்­டிற்குள் ஏதும் அசம்­பா­வி­தங்கள் நடந்தால் நாம் பொறுப்­பல்ல.

மகா­நா­யக்க தேரர்­களே பொறுப்­புக்­கூற வேண்டும் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மல்­வத்த மகா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கல தேர­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார். மல்­வத்த மகா­நா­யக்க தேர­ரிடம் 22 கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டது. மக­ஜரை மகா­நா­யக்க தேர­ரிடம் கைய­ளித்து ஞான­சார தேரர் மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார். 

கைய­ளிக்­கப்­பட்ட 22 கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டில் புதை­பொருள் ஆய்வுப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும், புனித பூமி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் குடி­யி­ருப்­பு­களும், பள்­ளி­வா­சல்­களும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

எந்த மதத்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு புதை­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். 

மத்­ர­ஸாக்­க­ளிலும், அரபு கல்­லூ­ரி­க­ளிலும் அடிப்­படை வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. எனவே இவ்­வா­றான மத்­ர­ஸாக்­களும், அரபு கல்­லூ­ரி­களும் தடை செய்­யப்­ப­டு­வ­துடன் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு சட்­டமும், நாட்டின் வர­லாறும் போதிக்கும் பாட­சா­லைகள் நிறு­வப்­ப­ட­வேண்டும். 

வடக்கு, கிழக்கில் உள்ள பெளத்த மர­பு­ரிமை ஸ்தலங்­களும், வர­லாற்றுத் தலங்­களும் அர­சாங்க வர்த்­த­­மானி மூலம் புனி­த­த­ல­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். 

எந்­த­வொரு கிராம அல்­லது நகர பாதைகள் அரபு, முஸ்லிம், தமிழ் பெயர்­களில் இருக்­கக்­கூ­டாது. அனைத்தும் சிங்­கள மொழிக்கு மாற்­றப்­ப­ட­வேண்டும்.

பெயர் மாற்­றப்­பட்ட பாதை­களின் பெயர்­க­ளுக்கு மீண்டும் பழைய பெயர்­களே சூட்­டப்­ப­ட­வேண்டும். மத­மாற்றம் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும்.

அதற்­கான சட்­ட­மொன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும்.

பாட­சாலைப் புத்­த­கங்­களில் வர­லாறு திரி­பு­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கி­றது. இது தடை­செய்­யப்­பட்டு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். 

கூர­கல, தெவ­ன­கல மற்றும் முகு­து­வி­காரை போன்ற பெளத்த மர­பு­ரிமைத் தலங்கள் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்டு பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். 

அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெறும் நிதியுத­விகள் அடிப்­ப­டை­வா­தி­களைச் சென்­ற­டை­கின்­றன. இது­தொ­டர்­பாக கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரு­வ­துடன் அவை கண்­கா­ணிக்­கப்­பட வேண்டும். 

வடக்கு, கிழக்கில் சிங்­கள மக்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும். அத்­தோடு அப்­பி­ர­தே­சங்­களில் குடி­யே­றி­யுள்­ள­வர்­க­ளுக்கு அர­சாங்கம் உரிய பாது­காப்பு வழங்க வேண்டும். 

மாலை­தீவு மற்றும் பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இலங்­கையில் அடைக்­கலம் வழங்­கவோ, பிர­ஜா­வு­ரிமை வழங்­கவோ கூடாது. 

தமிழ், முஸ்லிம் கத்­தோ­லிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது மத தலங்­களில் மாதம் ஒரு முறை கூடி சமூ­கப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கி­றார்கள்.

ஆனால் சிங்­கள பாரா­ளு­மன்ற உ றுப்­பி­னர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தில்லை. அதனால் மத­த­லங்­களில் மாதம் ஒரு முறை கூடு­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்டும். 

பெளத்த மதத்­துக்கு முதலிடம் வழங்கப்படுவதோடு இலங்கை சிங்களவர்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தஹம் (சமய) பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பரீட்சை எழுதுவதும் கட்டாயமாக்கப்படவேண்டும். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியுசன் தடைசெய்யப்படவேண்டும் என்பனவாகும். 

மகாநாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.jm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -