ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 வரை

ஏறாவூர்  ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு-ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆந்திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் 16.11.2016 ஆஜர்செய்யப்பட்டதையடுத்து இவர்களை எதிர்வரும் 30 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரீ. தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016 அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

இச்சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டவேளை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை சந்தேக நபர்களது இரத்த மாதிரி மற்றும் தடயப்பொருட்களும் பகுப்பாய்விற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -