அபு அலா -
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 33 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்களும் இன்று (23) வழங்கி வைப்பட்டன.
இவ்வாறு நியமனங்களை பெற்றுக்கொண்டவர்களில் 17 பேர் ஆயுர்வேத மருத்து பட்டம் பெற்ற வைத்தியர்களும், 14 பேர் யுனானி மருத்துவ பட்டம் பெற்ற வைத்தியர்களும், 2 பேர் சித்த வைத்திய பட்டம் பெற்றவர்களுக்கு இந்த நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவதுறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இம்மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வெளிமாகாணங்களை சேர்ந்த சுமார் 60 வைத்தியர்கள் இடமாற்றங்களை கோரியுள்ளனர். இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவதில் பல சிரமங்கள் உள்ளது. ஆனால், தற்போது இடமாற்றம் கோரியுள்ள வைத்தியர்களுக்கு இடமாற்றங்களை வழங்க முடியாதுள்ளது. என்று கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இவ்வாறு இடமாற்றங்களை கோரியுள்ள 60 வைத்தியர்களில் சிலருக்கு இடமாற்றங்கள் மிக விரைவாக வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம். அதுமாத்திரமல்லாமல் கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு ஆயுர்வேத வைத்திய சேவையை வழங்க வேண்டுமென்ற நோக்கில் இவ்வருடம் மட்டும் 10 இக்கு மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு வருகின்றது. இந்த வைத்தியசாலைகள் யாவும் இவ்வருட முடிவில் முடியும் தருவாயிலும் உள்ளது.
இதேபோலவே 10 மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளும் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு ஆயுர்வேத வைத்தியத்தி சேவையை வழங்கவேண்டும் அதற்காக அவர்களுக்கு ஏற்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.