3கோடி ருபா செலவில் நிருமாணிக்கப்பட்ட மாவடிப்பள்ளி புதிய பாலம் மக்கள் பாவனையில்..!

காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை கரையோரப்பிரதேசத்தையும் மேற்கையையும் இணைக்கும் பிரதான பாலமாகிய காரைதீவு மாவடிப்பள்ளிப்பாலம் பொதுமக்களின் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 3கோடி ருபா செலவில் கடந்த இரண்டு வருடங்களாக நிருமாணிக்கப்பட்டுவந்த காரைதீவு புதிய பாலமே இவ்வாறு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் உத்தியோகபூர்வமாக திறப்புவிழா இடம்பெறவில்லையென்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

கடந்தகாலங்களில் குறிப்பாக வெள்ள காலங்களில் பல உயிர்களைக்காவுகொண்ட இப்பழைய தாம்போதிக்குப் பதிலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை இப்புதிய பாலத்தை நிருமாணித்துள்ளது.

புதிய பாலம் அமைப்பதற்காக இடப்பட்ட உப பாலத்தினுடாக இதுவரை காலமும் போக்குவரத்து வசதியீனங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. 80மீற்றர் தூரமான இப்பாலத்திற்கு இருபக்கமும் கார்ப்பட் இடப்பட்டுள்ளது.

தற்போது புதிய பாலம் மிகவும் சீராக அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமமமின்றி பயணிக்கின்றார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -