அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முழுமையான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், 276 தொகுதிகளை கைப்பற்றியுள்ள ட்ரம்ப், ஹிலரியை காட்டிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவையின் அறிக்கையிடலின் பிரகாரம், 276 தொகுதிகளை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹிலரி 218 தொகுதிகளை மாத்திரம் கைப்பற்றி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இதன் மூலமாக அடுத்த 4 வருடங்களுக்கான வெள்ளைமாளிகையின் அதிகாரத்தை கைப்பற்றப் போகும் நபராக ட்ரம்ப் விளங்குகின்றார்.
அதேவேளை, தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்த ஜனநாயகக் கட்சி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.