அமரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் பாக்கிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் -அதிர்ச்சித் தகவல்

ற்போது சர்வதேசத்தின் முழு பார்வையும் டொனால்ட் ட்ரம்பு மீது திரும்பியுள்ள நிலையில், அவர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் டொனால்ட் ட்ரம்பு குறித்து பாக்கிஸ்தானிய ஊடகமான நியோ நியூஸ் புது விதமான செய்தி ஒன்றை வெளியிட்டு பாரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அதற்கு சான்றாக ட்ரம்பின் சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும், டொனால்ட் ட்ரம்பின் உண்மையான பெயர் “தாவூத் இப்ராகிம் கான்” எனவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் வர்சிஸ்தான் பகுதியில் பிறந்த டிரம்பு, தனது உண்மையான பெற்றோரை 1954ஆம் ஆண்டு இடம்பெற்ற சாலை விபத்தில் பறிகொடுத்ததார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானில் குழந்தையாக இருந்த டொனால்ட் டிரம்பை, ட்ரம்பின் பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -