திருகோணமலை.கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் தாய்ப்பால் புரையேறி 50 நாள் பிறந்த சிசுவொன்று இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிசுவிற்கு தாய் இன்று அதிகாலை தூக்கத்தில் அழுது கொண்டிருந்த வேளை பால் கொடுத்த போது பால் புரைக்கு ஏறியதாகவும் விரைவாக கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்ததாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சிசுவின் சடலம் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிசு குறை மாதத்தில் பிறந்ததாகவும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தாயின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு கோமரங்கடவெல.பம்புறுகஸ்வெவ பகுதியைச்சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.