புதுடெல்லி: போதிய எண்ணிக்கையில் நோட்டுகள் தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். புதிய ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு மாதமாக தயாரித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க இது துணிச்சலான நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.
நாளை மறுநாள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளுடன் வெளி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்கவே நாளை வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். தினகரன்