70ஆவது வரவு செலவு திட்டம் விபரம் (Live Update) >>>>

இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுச் செலவு திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அதன் முழு விபரம் இதோ....   (Refresh the Page For New update)

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவேற்றுகின்றேன். அனைவருக்கும் நல்லாசி கிடைக்கப் பெறுவதாக - நிதியமைச்சர்

நாட்டிலுள்ள பாரிய 100 தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணைய கோரிக்கை

இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்க தீர்மானம்

பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்
இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறும் வணிக செயற்பாடுகளுக்கு வரி

ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது

400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250 ரூபா

100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு

கார்பனுக்கு புதிய வரி

சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி
425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.

இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்

பருப்பு 10 ரூபாய், சீனி 2 ரூபாய் ,கேஸ் 25 ரூபாய், மண்ணெண்ணெய் 5 ரூபாவால் விலை குறைப்பு

அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக பொலிஸ் துறைக்கு 150 மில்லியன் ரூபா. தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புதிதாக துறவியாகுபவர்களுக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில்
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் உபகரண கொள்வனவுக்கு வரி விலக்குடனான கடன் வசதி


இளைஞர் தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண்பதற்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகந்ததாஸ அரங்கை புனரமைக்க 175 மில்லியன் ஒதுக்கீடு

காலம்சென்ற பண்டித் அமரதேவவின் ஞாபகமாக கலைக் கூடம் ஒன்றை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா

ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளில் 10 வருடத்துக்கு மேல் தங்கியிருந்தால் வீடுகள் சொந்தமாக்கப்படும்.

சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும். சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும்.

மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்
இராணுவத்தை பாதுகாப்பது எமது கடமையாகும்.

தனி வீட்டுத் திட்டத்தில் முதலில் 5 இலட்ச வீடுகள் : மலையகத்துக்கு 25 ஆயிரம் வீடுகள்.
நாட்டில் சிறப்பான குடிநீர்த் திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பதுளை, எல்ல, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்யப்படும்

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்கள் 32 ஆசனங்களை கொண்டதாக அமைக்க வேண்டும்.

முச்சக்கர வண்டிகளுக்கு புதியகார்கள். இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மொபிடல் நிறுவனத்தை பொது நிறுவனமாக பட்டியற்படுத்தல்

விஞ்ஞானம் தொழில்நுட்பங்களுக்காக 1 306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பதுளையில் 15 உள்ளூர் விமான நிலையங்கள் அமைக்கப்படும்


நெனொ நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • 15 தொழிற்றுறை ஏற்றுமதி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் வியாபார நிலையங்களை அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு தனியார் துறைக்கும் அழைப்பு

இலங்கையின் பெயரை பிரபிரபலப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி நீக்கம்
100, 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச் சலுகை
சிறப்பான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா

மெகா பொலிஸ் திட்டத்துக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் 250 தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக 300 மில்லியன் ரூபா முதலீடு

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன் வசதிகள் : 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
தனியார் பஸ் சேவைகள் 11 மணிவரை இயங்க வேண்டும்.

கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும்.

வணிக நிலையங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தனியார் துறையினருக்கு 5 நாள் மற்றும் 45 மணிநேர வேலை

இலங்கையில் படிப்பதற்கு விரும்பும் மாணவர்களுக்கு ஐந்து வருடம் சென்று வருவதற்கு வீசா

பாலர் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணையிலும் மருத்துவ சோதனை

தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பார்மசி நிலையங்கள் பதிவு செய்யாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா தண்டம்
பாலின வன்முறை மற்றும் பகிடிவதைகளை தடுப்பதற்கு பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிலையங்கள்

250 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் மின் கற்றல் மையம்
மாணவர்களுக்கு இலகுவாக அறிவை பெற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை பெற்றுக் கொடுக்க 4 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா


பத்தாயிரம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு மேலதிகமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபா

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் 8 மணிவரை நீடிக்கப்படும்

சிறிய வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாமல் இருக்கும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை மேற்கொள்ள 8 இலட்சம் ரூபா வழங்கப்படும். 300 மில்லியன் ஒதுக்கீடு


பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கு மாணவர்களுக்கு சர்வதேசத்தில் உயர்கல்வியை கற்பதற்கு புலமைப்பரிசில். இதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு -
2020 ஆம் ஆண்டு தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சேர்த்து கொள்ளப்படுவர்.

ருகுனு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்று அதிகராபிட்டிய வைத்தியசாலையில் புதிய கட்டிடம் அமைக்க திட்டம்

கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாணவர்களுக்கு 2இலட்சம் ரூபா காப்புறுதி வழங்க தீர்மானம்

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு 175 மில்லியன் ஒதுக்கீடு

மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சகல வங்கிகளிலும் கணக்குகள் திறக்கப்படும்
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உயர்தரப் மாணவர்களுக்கு 28 ஆயிரம் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக் கணனி வழங்கப்படும்

1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்

பாடசாலை தளபாடங்களுக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மொரகாகந்தை, உமா ஓயா திட்டங்களுக்கு 60045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

கல்விக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கல்

மன்னாரில் உள்ள தாரக்குளம் புனரமைக்கப்படும்

கொக்கோ, கோப்பி, மிளகு வெற்றிலை உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.

மீன்பிடி கைத்தொழிலுக்காக உட்கட்டமைப்பு, நங்கூர வசதிகளுக்காக 1350 மில்லியன் ரூபா

கோழி பண்ணையாளர்களுக்கு 15 ஆயிரம் குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்படும்

மீன் பிடித் துறையில் 163 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது. இதனை ஐந்து மடங்களால் அதிகரிக்க நடவடிக்கை

ஏற்றுமதி சந்தைகளில் இடம்பிடிக்க பழங்களை பயிரிடுவதற்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு

  இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்ய 900 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, 75 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு

பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டம்

ரப்பர் பெருந்திட்டம் அறிமுகம் செய்யப்படும்

2020 ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டம்

விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்

விவசாய களஞ்சியசாலைகள் வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்படும்

விவசாயத் துறைக்காக 20 ஆயிரம் ஹேக்கர் காணி வழங்கப்படும்

நவீன தொழினுட்பத்தை விவாசயத்தில் பயன்படுத்த திட்டம்

விவசாயத்துக்கு 200 மில்லியன் ஒதுக்கல்

2015 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் தரப்படும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போதும் சகலத் தரப்பினரின் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தோம்.

2016-11-10 02:18:47
13 வருடம் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்

2016-11-10 02:18:26
எதிர்காலத்தில் வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தனித் தனியான தீர்வுகள்

2016-11-10 14:16:21
நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்

2016-11-10 14:15:55
இடம், கல்வி, தொழில் சகலவற்றையும் முழுமையடைய செய்வோம் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -