சாய்ந்தமருதில் 70 குடும்பத்தினருக்கு ஸக்காத் விநியோகம்!





அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் ௧௮ ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு நேற்று சனிக்கிழமை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா பிரதம அதிதியாகவும் நிந்தவூர் பாத்திமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அலி அஹமட் ரஷாதி பிரதம பேச்சாளராகவும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஏ.ஏ.சலீம், பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் செயலாளர் யூ.எல்.எம்.ஜௌபர், பணிப்பாளர் ஏ.சி.சமால்தீன், மௌலவி எம்.ஐ.எம்.ரஹ்பி உட்பட பள்ளிவாசல் மரைக்காயர்கள், பைத்துஸ் ஸக்காத் நிதிய முக்கியஸ்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வருட காலத்தில் 210 தனவந்தர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 36 இலட்சத்து 19150 ரூபா பணமும் 193 மூடை நெல்லும் 70 வறிய குடும்பத்தினருக்கு இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -