அதாவுல்லாவின் 75குள் சுருங்கிய ஆர்பாட்டம்: கட்டுமானப்பணிகள் தொடரும்



எம் ரியாஸ்
க்கரைப்பற்றில் அமையப்பெறும் அம்பாறைமாவட்ட சமூக சேவைகள் காரியாலய கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு இன்று வெள்ளிகிழமை ஆர்பாட்ட கண்டனபேரணி இடம்பெற்றது ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மகஜர் ஒன்றினை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

அக்கரைப்பற்றில் இயங்கும் அம்பாறை மாவட்ட காரியாலயம் உரிய கட்டிடவசதி இல்லாமையினால் அம்பாரைக்கு கொண்டுசெள்ளபடவுள்ள நிலையில் குறித்த நிலப்பரப்பு நூதனசாலை அமைக்கபெற போதுமானதா என மாநகரசபை ஆணையாளரிடம் வினவப்பட்டபோது நூதனசாலை அமைக்க குறைந்தது 40 பேர்ச்சஸ் காணி தேவைப்படும் குறித்தகாணி 13பேர்ச்சஸ் உள்ளதனால் நூதனசாலை அமைக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் குறித்த காணியில் மாவட்ட சமூக சேவைகள் காரியாலயம் அமைப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் இடம்பெறும் ஆர்பாட்டங்களில் பெரும்திரளான மக்கள் கலந்துகொள்வர் ஆனால் இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் சுமார் 75 பேருக்குட்பட்ட மக்கள் தொகையினையே காணக்கூடியதாக இருந்தது அதிலும் சிறுவர்களும் அண்மையில் மாநகரசபையில் தொழில் பெற்றவர்களுமே கலந்துகொண்டிருந்தனர் மக்கள் பெருமளவில் இதில் ஆர்வம்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

எப்படியிருப்பினும் உரியமுறையில் அனுமதி பெற்று கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடித்தளமும் போடப்பட்டுள்ளமையினால் கட்டுமானப்பணிகளை நிறுத்துவது கடினம் என பிரதேச செயலாளர் காரியாலயத்திலிருந்து கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட காரியாலயதுக்கான நிதி ஒதுக்கீடு செய்தவர்கள் கருத்து கூறுகையில் அதாவுல்லாவின் குடும்பம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு அருகாமையிலுள்ள அரச காணிகளை அடாத்தில் பிடித்து வைத்துள்ளனர் மீதமாக உள்ள காணிகளை அரச கட்டிடங்கள் வரவிடாமல் தடுக்கின்றனர் இதில் மக்கள்தான் இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும் எனகூறினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -