நாட்டை முன்னேற்ற இன்னும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை - ரணில் கவலை

நாட்டு மக்களுக்கு இதனை விட சிறந்த வாழ்க்கை கொடுக்க வேண்டும். வார்த்தைகளில், போராட்ட கோஷங்களில் அதனை செய்ய முடியாது. அதற்கு பணம் அவசியம். கவர்ச்சிகரமான பொருளாதார பின்னணியை நாம் உருவாக்க வேண்டும்.

நாம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேட வேண்டும். தற்போதைய தேிய அரசாங்கத்திற்கு பின்னர் நாடு மாற்றமடையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சாதாரண குடும்பத்தை வலுப்படுத்தும், வாழ்க்கை போராட்டத்தை வெல்லக் கூடிய வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

நாட்டு மக்கள் தற்போது இருக்கும் வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்காக கவர்ச்சிகரமான பொருளாதார பின்னணியை உருவாக்க வேண்டும். சாதாரண குடும்பத்தை வலுப்படுத்தும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தமைக்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது வரலாற்று சிறப்புமிக்க வரவு செலவுத் திட்டம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்.இரண்டு கட்சிகள் இணைந்து இதனை செய்ய முடிந்தமை சிறந்த முன்னேற்றம். இந்த முன்னேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்தது.

கடந்த தசாப்தத்தில் நாட்டின் கடன் சுமையானது மூன்று மடங்காக அதிகரித்தது. 2014 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 391 பில்லியன். இதுதான் எமது பிரச்சி்னை. 5 ஆயிரத்து 169 பில்லியன் ரூபாக கடன் சுமை அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் 6 வீதமாக இருக்கும் போது செலவுகள் அதிகரிக்கும், கடனும் அதிகரிக்கும்.

கடன் அதிகரித்த காரணத்தினால், தேசிய வருமானம் 13 வீதமாக குறைந்தது. எமது ஏற்றுமதி வருமானம் குறைய ஆரம்பித்தது. பரம்பரிய பயிர்களின் விலைகள் குறைந்துள்ளன. ஜீ.எஸ்.பி. பிளஸ் இல்லாமல் போனது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது நாம் ஏற்படுத்திக்கொண்ட பிரச்சினை.

அரசின் வருமானம் செலவுகளை ஈடு செய்ய போதாமல் போனது. இதனால், கடனை பெற நேர்ந்தது. வெளிநாட்டு வர்த்தக கடன் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டது.

தேர்தலில் வென்ற பின்னர் வரிகளை அதிகரிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த சுமை யாருக்கு வரும். வருமானம் குறையும் போது, அந்த சுமை மக்களுக்கே வரும். இதனால், ரூபாவின் பெறுமதி குறையும். எனினும் 2015 ஆம் முதல் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் கைகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது.மக்களிடம் பணம் இருந்தது. நாங்கள் நாட்டின் வருமானத்தை பெருக்க ஆரம்பித்தோம்.

2 ஆயிரம் பில்லியன் வருமானத்தை எதிர்பார்த்துள்ளோம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ரூபாய் வலுவானால் அது குடும்பங்களுக்கு கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -