92 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மன்சூர் எம்பியால் வழங்கிவைப்பு





ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூபாய் 92 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சமூகசேவை நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்களையும், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.பசீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும், சமூகத் தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நாம் எல்லா விடயங்களிலும் மற்றவர்களை விடச் சிறப்பாகத் திகழ வேண்டுமென நினைத்தால், நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையில் நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எல்லா விடயங்களிலும் நேரத்தை நன்கு திட்டமிட்டு வாழப்பழகிக் கொள்ளுங்கள். நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்' எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -