ஞானசார தேரரே கைது செய்ய வேண்டும் - பாராளுமன்றில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைடீன்-

சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகங்குளக்கு எதிராக மிகக் காட்டமாக பேசி இனவாதத்தை தூண்டுகின்ற பொதுபல சேனாஅமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.எம் ஹரீஸ்; நேற்று (17) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்உரையாற்றும் போது தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்குவதற்காக 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்புடன் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டது. இந்தநல்லாட்சி உருவாகுவதற்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக இருந்ததையாரும் மறுக்க முடியாது. புதிய நல்லாட்சி உருவாக்கத்தின் மூலம் சிறுபான்மை மக்கள் தமது மத காலச்சார விழுமியங்கள் பேணிப்பாதுகாப்பப்படும் என்றும் தமக்கான உரிமைகள் சிறப்பாக வழங்கப்படும் என்று நம்பினார்கள். ஆனால் இன்று நாட்டில் நடைபெறும்சம்பவங்கள் குறித்த நம்பிக்கையினை தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்துள்ளது மிகுந்த வேதனையான விடயமாகஇருக்கின்றது.

சிறுபான்மை இனத்தவர்களின் மனதை புன்படுத்தும் வகையில் தெற்கிலுள்ள சில தலைமைகள் செயற்பட்டுவருகின்றது.பெரும்பான்மை இனவாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு இனவாதத்தைதூண்டும் விதமாக செயற்பட்டுகின்றனர். பல மதத்தலைவர்கள் முஸ்லிம்களின் மனதைப் புன்படுத்தும் வகையில் பேசுகின்றனர். இது தொடர்பில் பொலிசார் கண்டும் காணமலும் இருக்கின்றனர். 

ஞானசார தேரர் கைது செய்யுமாறு வேண்டுகோள்.

பிரபல்யமான முஸ்லிம் அமைப்பின் செயலாளர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு பகரமாக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த டான் பிரசாத் என்பவரை கைது செய்தார்கள். இனவாதத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக செயற்படும் பௌத்தமதத் தலைவர்களை கைது செய்யாது பெறுமானமில்லாத, உப்புச்சப்பு இல்லாத ஒருவரை கைது செய்துள்ளது வேதனையாகஇருக்கிறது. இக்கைதானது முஸ்லிம் அமைப்பின் செயலாளரை கைது செய்தமை தொடர்பில் நியாயம் கற்பிப்பதற்கே அன்றிவேறில்லை. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றும் கூட மிகப் பகிரங்கமாக சிறுபான்மை தமிழ்முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக மிகக் காட்டமாக பேசியுள்ளார். இவரை பொலிசார் கைது செய்திருக்க வேண்டும். இதனைநியாயமான செயலாக கருதமுடியும். ஆனால் இவரின் இனவாத செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதற்கானதகுந்த சான்றுகள் இருந்தபோதிலும் ஏன் இவரை இன்னும் கைது செய்யவில்லை?. அதைவிடுத்து முகவரியில்லாதவரை கைதுசெய்துவிட்டு சிறுபான்மையினரை திருப்திப்படுத்த நினைப்பது வேடிக்கையான விடயமாகும். 

மாணிக்க மடு சிலைவைப்பு தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

இறக்காமம் மாணிக்க மடு பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகஉள்ளது. இச்சிலைவைப்பின் மூலம் பல தசாப்த காலமாக இப்பிரதேச சமூகங்களுக்கிடையில் இருந்த நல்லுறவு கசப்பானதாகமாறியுள்ளதோடு பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்புலமாக அந்த மாவட்டத்தின் பிரபல அமைச்சர்இருப்பதோடு பகிரங்கமாக தான்தான் இதற்கு காரணம் என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கதக்க விடயமாகும். மக்கள் மத்தியில்சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்க வேண்டிய தலைவர்கள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில்செயற்பட்டு வருகின்றார். நீதியாகவும் நியாயமாகவும் நடந்து சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர்இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தைபெற்று அம்மக்களுக்கே துரோகத்தைச் செய்கின்றார். இது தொடர்பில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் அரசியலைப்பு ரீதியான உத்தரவாதங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தச் சபையில்வேண்டுகோள் விடுக்கிகின்றேன். 

கரையோர மாவட்டம் அமைக்க வலியுறுத்தல்

அரசியல் அதிகாரப் பரவலாக்கம் என்று பேசுகின்றபோது. அம்பாறை மாவட்டத்தில் 70 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இருந்தபோதிலும் நிர்வாக கடமைகள் சிங்கள மொழியில் நடைபெறுகிறது. இதனால் சிங்கள மொழி தெரியாத மக்கள் தமதுகருமங்களை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தில்அம்பாறையின் கரையோர பிரதேசத்தில் 12க்கு மேற்;பட்ட பிரதேச செயலகங்களை உள்ளடக்கி, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனைத் தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர நிர்வாக மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்த நாட்டின் அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தவிடயம் கடந்த1977ஆம் ஆண்டு ஜேயார் ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் மொறகொட எல்லை நிர்ணய கொமிசன் பரிந்துரை செய்த இந்த மாவட்டவிடயம் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது. அதனை இந்த அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும். 

தமிழ், முஸ்லிம் சமூக ஒற்றுமையினை வலியுறுத்தல்

கல்முனையில் வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்பாக மிக கீழ்த்தரமாக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இச்சபையில்பேசியிருந்தார். முஸ்லிம் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாது எனப்பேசினார். ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்பிரதேசத்தில் பெரும்பான்மை சமூகத்தினரால் அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடு தொடர்பில் மௌனியாக இருக்கின்றார். அம்பாறை அமைச்சருக்கு பயந்து இறக்காமம் தமிழ் பிரதேசத்தில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கதிராணியற்று முதுகெழும்பு இல்லாதவர் போல் பயந்து ஒழிந்துள்ளார். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார். தற்காலசூழ்நிலையின் யதார்த்தத்தை உணர்ந்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஓற்றுமையாக வாழ வைக்க செயலாற்ற வேண்டும் எனவும்கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -