கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பிற்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிறுவனத்தின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை (B.A) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு கதிரைகளை கையளித்தார். இந்நிகழ்வில் எனைய அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.சீ.எம். ரிஸ்வான் (மதனி) எம்.ஏ.எம். மசூத் அஹமட் (காஸிமி), நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
சமூக சேவைப் பணிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படும் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரை காத்தான்குடியிலேயே அதிகமாக காணப்படுவதாகவும். அத்தகைய பல்வேறு அர்பணிப்புகளுக்கு மத்தியில் சமூக நலனுக்காக வினைத்திறனுடன் செயற்படும் அமைப்புகளுள் ஒன்றான சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பின் சேவையும் பாராட்டத்தக்கதாகும்.
இத்தகைய மனிதாபிமான உதவி திட்டங்களை முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகத்தவர்களுக்கும் வழங்குவதன் மூலம் எம்மை பற்றிய கசப்பான எண்ணங்களை அவர்களின் உள்ளங்களிலிருந்து நீங்குவதற்கும் சிறந்த புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைவதோடு எவ்வித எதிர்பார்புக்களுமின்றி தூய நோக்கோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.