அய்ஷத்-பாலமுனை-
அதிபர் திலகம் மர்ஹூம் அலி உதுமாலெவ்வை(அக்பர் மாஸ்டர்) நினைவாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட "அக்பர் மாஸ்டர் பெளன்டசன்" (AMF) அமைப்பபினர்,
பாலமுனை வைத்தியசாலையில் இது வரை காகிதத்தில் வைத்து வழங்கப்பட்டுவந்த மாத்திரைகளை முறையாக வழங்கும் நோக்கில் சுமார் பன்னிரெண்டாயிரம் மாத்திரை உறைகளை நேற்று(2016.11.14) அன்பளிப்பு செய்தனர்.
இவ் உறைகள் பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சமூன், டாக்டர் மாஹிறூன் ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக வைத்திய அதிகாரி டாக்டர் சமூன் கூறுகையில் "நீண்ட நாள் குறையாக இருந்து வந்த மாத்திரை உறைகளின் தேவையை நீங்களாகவே உணர்ந்து முன்வந்து அன்பளிப்பு செய்தமைக்காக உங்களுக்கும் உங்கள் அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். இருந்த போதும் தங்களால் வழங்கி வைக்கப்பட்ட இவ் உறைகள் சுமார் இரு மாதங்களுக்கே போதுமானதாகும் எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏனையவர்களும் முன் வந்தால் தொடர்ச்சியாக இவ்வொழுங்கை பேணமுடியுமென்றார்.