களப்பு முகாமைத்துவம் தொடர்பில் குச்சவெளியில் செயலமர்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
ளப்புக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் இறக்கண்டி களப்பு முகாமைத்துவ குழுவை ஸ்தாபித்தல் தொடர்பான விசேட செயலமர்வு (08) குச்சவெளி பிரதேச செயலகத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இறக்கண்டி களப்பு மிக முக்கியமான கடல் வளங்களைக் கொண்டுள்ளதாகவும் அவை பல்வேறு தரப்பினருடைய பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள் மக்களின் வாழ்வாதாரம் உட்பட பல விடயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று குச்சவெளி பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இறக்ககண்டி களப்பை முகாமை செய்ய தேவையான குழுவை ஸ்தாபிப்பது இன்றியமையாயதது. களப்புக்களை நிரப்பல்இ களப்புக்களில் குப்பை கூழங்களை கொட்டல் என பல்வேறு விரும்பத்தகாத செயற்பாடுகளை மனிதர்கள் மேற்கொள்கிறார்கள். விசேடமாக இறக்ககண்டி களப்பு கூடுதல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றது. நாட்டு நலன் மற்றும் சுற்றாடல் நலன் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி இக்களப்பினை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதன்போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

களப்பு நல்லிணக்க முகாமைத்துவ குழு அமைத்தல் மற்றும் களப்பு முகாமைத்துவம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் மின்பிடி அமைச்சின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி அமித அபேசிறியினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

பாம் பவுண்டேசன் அமைப்பு இலங்கையில் உள்ள 116 களப்புக்களில் 18இல் களப்பு முகாமைத்துவம் தொடர்பில் 1996 / 2013 ஆண்டு 35ஆவது சரத்திற்திற்கு ஏற்ப செயற்பட்டு வருவதாகவும் இறக்ககண்டி களப்பில் இதுவரை 6 களப்பு நல்லிணக்க முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாம் ; பவுண்டேசன் அமைப்பின் திருகோணமலை மாவட்ட திட்ட முகாமையாளர் எச்.எம்.அன்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட செயல்திட்டத்தை செய்த முடிக்க 03 மாத காலப்பகுதி வழங்கப்பட்டதாகவும் அவற்றுள் அதிகமான விடயங்கள் திருப்திகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இக்காலப்பகுதியினுள் தமது நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பிட்ட காலப்பகுதியினுள் களப்பு முகாமைத்துவம் தொடர்பில் அர்ப்ணிப்புடன் செயற்பட்ட பாம் பவுண்டேசன் அமைப்பின் திருகோணமலை மாவட்ட திட்ட முகாமையாளர் எச்.எம்.அன்வரிற்கு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தமது பாராட்டுதல்களை இதன்போது தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் திருகோணமலை மாவட்ட உதவி முகாமையாளர் சிறிபதிஇ கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள செயல்திட்ட திருகோணமலை மாவட்ட முகாமையாளர் சந்தன செனவிரத்னஇ கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள்இ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மின்பிடி தொழிலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வு பாம் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் சுனில் தொம்பேவலவின் ஆலோசனைக்கமைய அரச திணைக்களங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -