பொய்யாக நோயாளியைப் போல் நடிக்காதீர்கள், மஹிந்த உங்களுக்கு வைத்தியம் பார்த்தது எமக்கு நன்றாக தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் நடந்த காராசாரமாக வரவு செலவு திட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். வரவு செலவு திட்டம் தொடர்பில் அவர் உரையாற்றும் போது இடையில் விமல் வீரவன்ச அவரது உரையினை குழப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில்,
விமல் உங்களுக்கு எப்படியான நோய் இருக்கின்றது என்பது எமக்கு நன்றாக தெரியும், உங்களுடைய நோயை எப்போதுமே குணப்படுத்த முடியாது, உங்களுக்கு உள்ள வியாதி விபரீதமானது. மஹிந்த உங்களுக்கு வைத்தியம் பார்த்தார் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கெல்லாம் சுதந்திரம் கொடுத்ததே குற்றம், பொய்யாக நோயாளி போல் நடிக்கவேண்டாம்.
சபாநாயகர் அவர்களே விமல் தேவையில்லாத விடயங்களில் நுழைகின்றார், சாக்கடைக்குள்ளேயும் நுழைகின்றார் அவரைக் கட்டிப்போடுங்கள் என கெஹெலிய தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “இப்போதும் எனக்கு நோய் இருக்கின்றது” என விமல் பரிதாபமாகவும், பதற்றமாகவும் கூறினார். எனினும் அவருக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்க இடம் கொடுக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.